உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

Published On 2023-08-07 14:18 IST   |   Update On 2023-08-07 14:18:00 IST
  • மனு கொடுக்க வருபவர்களை பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள்.
  • கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கி ழமை தோறும் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப் பட்டு வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக வருகிறார்கள்.

இதில் சிலர் தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலக வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் மனு கொடுக்க வருபவர்களை பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திங்கள் கிழமையான இன்றும் மனு அளிப்பதற்கு ஏராள மானோர் வந்திருந்தனர். அதில் முதியவர் ஒருவர் திடீரென கலெக்டர் அலுவ லக வாசலில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி மயங்கி விழுந்தார். அப்போது கலெக்டர் அலுவ லகத்தில் நடந்த வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அந்த நபரை பிடித்து காப்பாற்றினார்கள். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

போலீசார் முதியவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பூதப்பாண்டி அருமநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுவிசேஷமுத்து (வயது 72) என்பது தெரியவந்தது. அவரது தோட்ட பயிருக்கு வேலி அமைத்து இருந்ததாகவும், அதை 2 பேர் தீ வைத்து எரித்து விட்டதாகவும், இது தொடர்பாக உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதுதொடர்பாக சம்பந் தப்பட்ட போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீ சார் உறுதி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News