உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பேச்சாளர் பயிற்சி பட்டறை

Published On 2022-07-31 09:43 GMT   |   Update On 2022-07-31 09:43 GMT
  • மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தொடங்கி வைத்தார்
  • பேச்சாளர் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கலை இலக்கிய அணியின் சார்பில் தென் மண்டல அளவிலான பேச்சாளர் பயிற்சி பட்டறை கன்னியாகுமரியில் நேற்று நடந்தது.

மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் நாஞ்சில் எம்.எஸ். அமலன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மாணவர்அணி செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் கலந்து கொண்டு பேச்சாளர் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்.

சமூக பொது நல இயக்க பொதுச்செயலாளர் ஏ.எஸ். சங்கர பாண்டியன், ஆசிரியர்கள் ஜோசப், மேரி விஜயா ஆகியோர் பேச்சாளர் ஆவது எப்படி?என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஜெபசிங், தோவாளை ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சந்திரா, மாநகரப் பகுதி செயலாளர் டாக்டர் நலம் குமார், நெல்லை மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் ராஜகணபதி, விருதுநகர் மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் பரமசிவம், வள்ளியூர் அவைத்தலைவர் அந்தோணிசாமி, பணகுடி நகர செயலாளர் மைக்கில் அந்தோணி, நாகர்கோவில் மாநகர 34-வது வார்டு செயலாளர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் இந்த பேச்சாளர் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. இந்த சான்றிதழ்களை மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் வழங்கி னார். முடிவில் கோவளம் ஊராட்சி செயலாளர் அகிலன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News