உள்ளூர் செய்திகள்

தோவாளையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் யானை மீது அமர்ந்து நூதன பிரசாரம்

Published On 2023-08-12 14:53 IST   |   Update On 2023-08-12 14:53:00 IST
  • குமரி மாவட்ட அ.தி.மு.க.வினர் பொதுமக்களை சந்தித்து வருகிறார்கள்.
  • யானையின் மீது அமர்ந்து நூதன பிரசாரம் நடத்திய நிர்வாகிகளை பொது மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

கன்னியாகுமரி :

அ.தி.மு.க. பொன் விழா மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி பெருந்திரளாக பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டி முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிவுரையின்படி குமரி மாவட்ட அ.தி.மு.க.வினர் பொதுமக்களை சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தோவாளையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், மாவட்ட இணை செயலாளரும் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவருமான சாந்தினி பகவதியப்பன் ஆகியோர் கட்சி நிர்வாகி களுடன் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்து மாநாடு குறித்த அழைப்பு களை கையில் வைத்து கொண்டு வீதி வீதியாக மக்களை அழைக்கும் விதமாக பிரசாரம் மேற் கொண்டனர். யானையின் மீது அமர்ந்து நூதன பிரசாரம் நடத்திய அ.தி.மு.க. நிர்வாகிகளை பொது மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

Tags:    

Similar News