அனுமதியின்றி நடத்தப்படும் மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
- பதிவு உரிமம் கோரும் விண்ணப் பதாரர்கள் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம்
- 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதுடன் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவ னங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதி கள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனிநபர் ஆகி யோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் 31.08.2028-க்குள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஒழுங்குபடுத்து தல் சட்டம் 2014-ன் கீழ் கண்டிப்பாக பதிவு செய்திட வேண்டும்.
குமரி மாவட்டத்தில் பதிவு உரிமம் வேண்டி வரப்பெற்றுள்ள விண்ணப் பங்கள் பரிசீலிக்கப்பட்டு பதிவு சான்றிதழ் வழங்கப் பட்டு வருகிறது. பதிவு உரிமம் கோரும் விண்ணப் பதாரர்கள் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்க ளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவ லகத்தில் விண்ணப்பிக்கு மாறு தெரிவிக்கப்படுகிறது.பதிவு செய்யப்படாத விடுதிகள், இல்லங்கள் பதிவு உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு பல முறை செய்தி வெளியி டப்பட்டுள்ளது.
எனவே 31.08.2023-க்குள் விண்ணப்பிக்க தவறிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதுடன் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். பதிவு உரிமம் தொடர் பான கூடுதல் விவ ரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் இணைப்பு கட்டடம் தரைத்தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவல கத்தை தொடர்பு கொள்ள வும். 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட கலெக்டர் அலு வலகத்தின் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.