அருமனை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
- காலையில் அந்த வழியாக சென்றவர்கள் விஜீஷ் பிணமாக கிடப்பதை பார்த்தனர்.
- தற்கொலை செய்தது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருமனை :
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடு திடுமண் தோட்டம் பகுதியை சேர்ந்த மனோன்மணி என்பவரின் மகன் விஜீஷ் (வயது 27). கூலி வேலை பார்த்து வந்த இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது.
குடிப்பழக்கத்தை நிறுத்து மாறு அவரை அவரது பெற்றோர் பலமுறை கேட்டுக்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் அவர் குடிப்பழக்கத்தை கைவிட வில்லை. இதனால் விரக்திய டைந்த அவரது பெற்றோர், வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு சென்று குடியேறினார்கள்.
இதனால் விஜீஷ் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார். நேற்று ஓணம் என்பதால் அவர் அதிக அளவில் மது குடித்திருக்கிறார். பின்பு இரவில் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு படுத்துக்கொண்டாக தெரிகிறது. இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் விஜீஷ் பிணமாக கிடப்பதை பார்த்தனர்.
அதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விஜீஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து அரு மனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்தது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.