உள்ளூர் செய்திகள்

கருணாநிதி வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி

Published On 2023-08-12 10:29 GMT   |   Update On 2023-08-12 10:29 GMT
  • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
  • கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் ஆபூர்வ புகைப்படங்கள் மற்றும் அவரின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது. இந்த கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த கண்காட்சியை முத்தமிழ் முற்றத்தின் தலைவர் கீழப்பாவூர் சண்முகையா தொடங்கி வைத்தார்.

கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் மாதம் ஒரு நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த நிகழ்வுகள் நடத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி, ஓவியர் கோபால கிருஷ்ணன், கீதா, ஓய்வுபெற்ற ஆசிரியை ஜெயமதி ரொசாரியோ, வளர்மதி, செந்தில் வேல்முருகன் மற்றும் சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டு கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்து கலந்தாலோசித்தார்கள்.

இந்த கண்காட்சி இந்த மாதம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News