மார்த்தாண்டம் அருகே பெண்ணை தாக்கியதாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் மீது வழக்கு
- பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மகேஷ் (27), ராணுவ வீரர். இவர் விடுமுறையில் வரும் போது தன்னுடைய காரை, அமல நிஷா வீட்டு கேட்டின் முன்பு சாலையில் நிறுத்துவாராம்.
- மகேசுக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த அஜில் (30) என்பவரும் பேசியதோடு, கல்வீசி அமலா நிஷாவின் அண்ணனை தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி :மார்த்தாண்டம் அருகே பெண்ணை தாக்கியதாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் மீது வழக்கு
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் அமல நிஷா (வயது 40).
இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மகேஷ் (27), ராணுவ வீரர். இவர் விடுமுறையில் வரும் போது தன்னுடைய காரை, அமல நிஷா வீட்டு கேட்டின் முன்பு சாலையில் நிறுத்துவாராம்.
இதனால் அமலநிஷா வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாத நிலை உருவானது. சம்பவத் தன்று இதனை அமலா நிஷா தட்டிக் கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் மகேஷ் ஆத்திரமடைந்து அமலா நிஷாவின் தலை முடியை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
மகேசுக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த அஜில் (30) என்பவரும் பேசியதோடு, கல்வீசி அமலா நிஷாவின் அண்ணனை தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் மார்த்தா ண்டம் போலீசார் விசா ரணை நடத்தி மகேஷ் மற்றும் அஜில் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.