உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே நர்சிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2023-05-18 12:25 IST   |   Update On 2023-05-18 12:25:00 IST
  • முகவரி கேட்பது போல் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கைவரிசை
  • சி.சி..டி.வி. காமிரா பதிவுகளின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு

கன்னியாகுமரி :

களியக்காவிளை அருகே உள்ள கூட்டப்புளி பகுதியை சேர்ந்தவர் றெஸல்ராஜ். இவரதுமனைவி சைனி.

இவர் வீட்டின் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை செய்யும் ஆஸ்பத்திரி வீட்டின் அருகில் இருப்பதால் வேலைக்கு நடந்து செல்வது வழக்கம்.

அது போல் மதியம் சாப்பிடுவதற்கும் வீட்டுக்கு நடந்து செல்வாராம். இந்த நிலையில் சைனி நேற்று மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு நடந்து சென்றுள் ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் சைனியிடம் முகவரி கேட்பது போல் அருகில் வந்துள்ளார்.

அவர் கொடுத்த பேப்பரை வாங்கி பார்த்த போது, அந்த நபர் சைனியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சைனி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

அதற்குள் மர்மநபர் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மோட் டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சைனி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினார்கள். சைனியிடம் கொள்ளையன் குறித்த அடையாளங்களை கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இதை தொடர்ந்து கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி..டி.வி. காமிரா பதிவுகளின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:    

Similar News