உள்ளூர் செய்திகள்

சாலையில் கிடந்த செல்போனை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களை படத்தில் காணலாம்

குளச்சலில் சாலையில் கிடந்த செல்போனை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள்

Published On 2023-01-08 13:23 IST   |   Update On 2023-01-08 13:23:00 IST
  • பள்ளி மாணவர்களின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
  • குளச்சல் இலப்பவிளை பகுதியை சேர்ந்த முகமது பயஸ், ராபில், ஷாகித் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி:

குளச்சல் இலப்பவிளை பகுதியை சேர்ந்த முகமது பயஸ், ராபில், ஷாகித் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி முடிந்து குளச்சல் அருகே உடையார்விளை பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர்.

பொருட்களை வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினர்.அப்போது சாலையில் செல்போன் ஒலிக்கும் சப்தம் கேட்டது.உடனே அவர்கள் அருகே சென்று பார்த்த போது விலை உயர்ந்த செல்போன் திரை உடைந்த நிலையில் ஒலித்து கொண்டிருப்பதை கண்டு அதை எடுத்தனர்.

பின்னர் அதனை மாணவர்கள் நேராக குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டியிடம் ஒப்படைத்தனர். சாலையில் கண்டெடுத்த செல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News