உள்ளூர் செய்திகள்
கஞ்சி கலயங்களை சுமந்து ஊர்வலமாக வந்து வழிபட்ட பக்தர்கள்.
மழைமுத்துமாரியம்மன் கோவிலில் கஞ்சி கலய வழிபாடு
- அம்மனுக்கு பால், பன்னீர், உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆலய த்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு குறிச்சி அபிராமி அம்மன் ஆலயத்தில் இருந்து விரதம் இருந்த 108 பெண்கள் கஞ்சி கலையங்களை சுமந்து வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.
அதனைதொடர்ந்து அம்மனுக்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பி க்கப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு கஞ்சி பிரசாதமாக வழங்க ப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.