உள்ளூர் செய்திகள்

பாலமலையில் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியினை வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

பாலமலையில் நடந்து வரும் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணிகளை வேளாண் அதிகாரி ஆய்வு

Published On 2023-05-20 12:40 IST   |   Update On 2023-05-20 12:40:00 IST
  • பாலமலை கிராம ஊராட்சியில் ரூ.13.87 லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியினை சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் ஆய்வு செய்தார்.
  • 20 விவசாயிகளுக்கு 20 ஏக்கரில் நுண்ணுயிர் பாசனம் அமைத்து தரப்படும்.

மேட்டூர்:

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கீழ், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலமலை கிராம ஊராட்சியில் ரூ.13.87 லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியினை சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் ஆய்வு செய்தார்.

இந்த திறந்த வெளி கிணறு பணி முடிக்கப்பட்ட பின் 20 விவசாயிகளுக்கு 20 ஏக்கரில் நுண்ணுயிர் பாசனம் அமைத்து தரப்படும். இதனால் 20 ஏக்கர் தரிசு நில தொகுப்பு விவசாயிகள் பயனடைவார்கள்.

இந்த ஆய்வின்போது தரிசு நில தொகுப்பு விவசாயிகளிடம் பயிர் சாகுபடி மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து இணை இயக்குனர் சிங்காரம் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இதே போல், நவபட்டி மற்றும் பண்ணவாடி கிராமத்தை சேர்ந்த தரிசு நிலத் தொகுப்பு விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் தொழில்நுட்ப ஆலோசனை கள் வழங்கினார்.

Tags:    

Similar News