உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் நடந்தது. 

போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்க வலியுறுத்தல்

Update: 2022-08-15 10:09 GMT
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் இல்லை.
  • அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு போர்க்கால அடிப்படையில் உரிய நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் போக்குவரத்து கழக ஏ.ஐ.டி .யூ .சி. தொழிலாளர் சங்கத்தின் 39-வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். 39 -வது பேரவை கொடியினை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை கவுரவ தலைவர் சுந்தரபாண்டியன் வாசித்தார். மாநில செயலாளர் சந்திரகுமார் பேரவையை தொடக்கி வைத்து பேசினார். சங்க பொதுச் செயலாளர் கஸ்தூரி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் தாமரைச்செல்வன் வரவு செலவு வாசித்தார்.

இந்த பேரவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் இல்லை என்ற போக்குவரத்து துறை அமைச்சரின் அறிவிப்பினை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு போர்க்கால அடிப்படையில் உரிய நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும், தொழிலாளர்களின் 14- வது ஊதிய ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவடைவதால் உடனடியாக ஒப்பந்தம் பேசி முடித்து மூன்றாண்டு ஒப்பந்த பலன்கள் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட வேண்டும், நிலுவை தொகை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன், மின்வாரிய சம்மேளன துணைத் தலைவர் பொன்.தங்கவேல், ஏ .ஐ. டி .யூ .சி மாவட்ட தலைவர் சேவையா, தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் மல்லி தியாகராஜன், பொதுச்செயலாளர் அப்பாத்துரை, பொருளாளர் பாலசுப்பிரமணியன், கட்டுமான சங்க செயலாளர் செல்வம் , டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

Similar News