உள்ளூர் செய்திகள்

புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி.

புதியம்புத்தூரில் மாலை நேரங்களில் தொடர் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-10-25 07:03 GMT   |   Update On 2023-10-25 07:03 GMT
  • புதியம்புத்தூர் பகுதிகளில் 4 நாட்களாக மாலை வேளையில் மழை பெய்து வந்தது.
  • நேற்று முன்தினம் பெய்த கனமழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய அரசு கட்டிடங்கள் உள்ள வளாகத்தில் மழைநீர் தேங்கியது.

புதியம்புத்தூர்:

புதியம்புத்தூர் பகுதிகளில் 4 நாட்களாக மாலை வேளையில் மழை பெய்து வந்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

நேற்று முன்தினம் கனமழை பெய்தது. எனவே உளுந்து, பாசிப்பயறு கம்பு, பருத்தி, சோளம் பயிரிட்டுள்ள மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதியம்புத்தூர் மலர் குளத்திற்கு மழை நீர் வரும் தெற்கு காட்டில் கன மழை பெய்ததால் மலர் குளத்திற்கு மழை நீர் வர ஆரம்பித்துள்ளது. மலர் குளத்திற்கு அதிகமான மழை நீர் வரும் மேற்கு பகுதியில் உள்ள குனவன் குளம், செவல்குளம், புதுப்பச்சேரி குளம் உள்ளிட்ட 7 குளங்கள் இன்னும் நிரம்பவில்லை.

மழைநீர் தேங்கியது

அந்தக் குளங்கள் நிரம்பி னால் தான் மலர் குளம் நிரம்ப வாய்ப்பு உண்டு. நேற்று முன்தினம் பெய்த கன மழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், கால்நடை மருத்துவமனை, சித்த மருந்தகம் ஆகிய அரசு கட்டிடங்கள் உள்ள வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் அவதி யடைந்தனர். நேற்று மழை நீர் வடிய ஆரம்பித்தவுடன் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News