உள்ளூர் செய்திகள்
விருத்தாசலத்தில்: சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோவில் வாலிபர் கைது
- விருத்தாசலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் வெற்றிவேல் (20). இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு வந்த புகாரின் பேரில் வெற்றிவேலை அழைத்து விசாரித்தனர். புகார் உறுதியான நிலையில் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.