உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.

வேப்பனபள்ளியில் கஞ்சா ஒழிப்பு விழிப்புணர்வு

Published On 2022-12-02 15:21 IST   |   Update On 2022-12-02 15:21:00 IST
  • கஞ்சா ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • துண்டு பிரசு ரங்கள் மூலமாகவும், ஒலிபெருக்கியின் மூலமாக வும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் வனத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு கஞ்சா ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி வன சரக அலுவலர் ரவி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி சரக வனவர்கள் தேவேந்திரன், அண்ணாதுரை, சம்பத்கு மார், வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுமக்களுக்கு கஞ்சா பயன்படுத்துவதால் அதன் தீமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. வனப்பகுதியை யொட்டி விளைநிலங்களில் விவசாயி கள் அனுமதியின்றி மின்வேலிகள் அமைக்க கூடாது. பொதுமக்கள் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி செல்ல கூடாது. காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகளை பொதுமக்கள் துன்புறுத்து தல் கூடாது என்பது குறித்து துண்டு பிரசு ரங்கள் மூலமாகவும், ஒலிபெருக்கியின் மூலமாக வும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

மேலும் கஞ்சா செடிகள் வளர்ப்பவர்கள் மீதும், விலங்குகளை துன்புறுத்துபவர்கள் மீதும், வனப்பகுதியை அருகே விவசாய நிலங்களில் அனுமதி இன்றி மின் கம்பிகள் அமைப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி மகாராஜா கடை, பர்கூர், சிந்தாம்பள்ளி ஆகிய வன காப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News