உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

தஞ்சையில், தலைக்கவசம், உயிர்க்கவசம் விழிப்புணர்வு நாடகம்

Published On 2023-04-03 08:18 GMT   |   Update On 2023-04-03 08:18 GMT
  • தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அறிவுரை.
  • தலைகவசம் வைத்துக்கொண்டு அணியாமல் வாகனங்களில் தொங்க விட்டபடி செல்லக்கூடாது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க ப்பட்டு வருகிறது. தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள்.

மேலும் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்று விபத்துக்குள்ளாகி உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறர்கள்.

அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அறிவுரை கூறியதோடு, தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என உறுதிமொழியும் மேற்கொள்ள செய்தனர்.

இதையடுத்து தஞ்சை அண்ணாநகர் பகுதியில் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைகவசம் உயிர்கவசம் என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு நாடகத்தில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அவ்வாறு ஓட்டினால் உயிரிழப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை போலீசார் தத்ரூபமாக நடித்து காட்டினர். மேலும் தலைகவசம் வைத்துக்கொண்டு அணியாமல் வாகனங்களில் தொங்க விட்டபடி செல்லக்கூடாது, தலைகவசம் அணிந்து தான் பயணிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Tags:    

Similar News