தஞ்சையில் ஆக்கிரமிப்பில் உள்ள நடைமேடை கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது.
தஞ்சையில், ஆக்கிரமிப்பு நடைமேடை கடைகள் அகற்றம்
- ஆக்கிரமிப்பில் உள்ள நடைமேடை கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரி–களுக்கு உத்தரவிட்டார்.
- பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் காந்திஜி சாலை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதிகள் ஆகும்.
இந்நிலையில், நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆணையர் சரவணகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்ேபாது அந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள நடைமேடை கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரி–களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவர் உடன் வந்த அதிகாரிகள் அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தினர்.
மேலும் நடைமேடை கடைகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் இந்த பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஆய்வின்போது மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மோகனா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.