உள்ளூர் செய்திகள்

சைக்கிளில் சென்றவர்களுக்கு தலா 1 கிலோ தக்காளி வழங்கப்பட்டது.

தஞ்சையில், சைக்கிளில் சென்றவர்களுக்கு 1 கிலோ தக்காளி வழங்கல்

Published On 2023-07-30 10:48 GMT   |   Update On 2023-07-30 10:48 GMT
  • சுற்றுச்சூழல் காக்கப்படுவதோடு உடல்நலத்தையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும்.
  • பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர்:

உடல் ஆரோக்கியத்தி ற்காகவும், சுற்றுச்சூழலை காக்கவும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் சென்றவர்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தலா ஒரு கிலோ தக்காளி விலையில்லாமல் வழங்கப்பட்டது.

தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை யிலான போக்குவரத்து காவலர்கள் அந்த வழியாக சைக்கிளில் வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அத்தியாவசிய செலவை கட்டுப்படுத்தவும் இது போன்று அன்றாடம் சைக்கிளை தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தி அவர்களுக்கு தலா 1 கிலோ தக்காளி விலையில்லாமல் வழங்கினர்.மேலும் அவர் கூறுகையில், சைக்கிளை பயன்படுத்தாமல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதால் இன்று சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. சைக்கிளை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் காக்கப்படு வதோடு உடல்நலத்தையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

வரலாறு காணாத அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து வரும் வேளையில் இது போன்ற நூதன விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் பொதுமக்களிடம் விலையில்லாமல் தக்காளி வழங்கப்படுவது தஞ்சை மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது .

இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி,

மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News