உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

தஞ்சையில், ஏ.ஐ.டி.யூ.சி.யினர் மறியல் போராட்டம்; 45 பேர் கைது

Published On 2023-01-24 09:08 GMT   |   Update On 2023-01-24 09:08 GMT
  • டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
  • தெருவியாபார தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்:

அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயத்தை கைவிட வேண்டும், போக்குவரத்து கழக பணியிடங்களை தனியாரிடம் வழங்க கூடாது, டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், தெருவியாபார தொழிலாளர்கள் சட்டத்தை அமுல்படுத்துவது, நலவாரிய பதிவுகளை எளிமைபடுத்தி நிதி உதவிகளை அதிகப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைெபற்றது.

இதற்கு தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர்கோ விந்தராஜன், வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர்அன்பழகன், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள்தா மரைச்செல்வன், கஸ்தூரி, கே.சுந்தர பாண்டியன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர்அ ப்பாத்துரை, சுப்பிரமணியன் , தங்கராசு, நுகர் பொருள் வாணிபகழக சங்க மாவட்ட நிர்வாகிகள் ஞானசேகரன், தியாகராஜன், உடல்உழைப்பு சங்க நிர்வாகிகள்பரிமளா, சுதா,கல்யாணி, மின்வாரிய சம்மேளன மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், நிர்வாகிகள் நாகராஜன், லெட்சுமணன், கட்டுமான சங்க நிர்வாகிகள்செல்வம், சிவப்பியம்மாள், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறே தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். இதனால் ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் தபால் நிலையம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர். இதேப்போல் கும்பகோணம், பட்டுக்கோட்டையிலும் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News