உள்ளூர் செய்திகள்

ராயக்கோட்டை மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை

Published On 2022-08-10 09:03 GMT   |   Update On 2022-08-10 09:03 GMT
  • விவசாயிகளிடம் இருந்து 25 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 160 ரூபாய்க்கு வாங்கப்பட்டது.
  • விலை குறைந்து வருவதால் ஒரு கிலோவிற்கு 5 ரூபாய் கூட கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி பிரதானமாக நடந்து வருகிறது. ராயக்கோட்டையில் உள்ள மிகப்பெரிய தக்காளி மார்க்கெட் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இங்கிருந்து தான் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்தாண்டு இறுதியில் தக்காளி விலை உச்சத்தை தொட்டது.

இந்நிலையில் தற்போது தக்காளி விலை குறைந்து வருகிறது. ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் கடந்த 7-ம் தேதி விவசாயிகளிடம் இருந்து 25 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 160 ரூபாய்க்கு வாங்கப்பட்டது.

நேற்று முன்தினம் அதன் விலை சரிவை சந்தித்து 130 ரூபாய்க்கும், நேற்று 120 ரூபாய்க்கும் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டது.

விலை குறைந்து வருவதால் ஒரு கிலோவிற்கு 5 ரூபாய் கூட கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பறிப்பு கூலி கூட கிடைக்காது என்பதால் பலர் தக்காளியை பறிக்காமல் செடிகளில் விட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக தக்காளி தரமானதாக சாகுபடியாகுவதில்லை. அதை காரணமாக காட்டி விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு தக்காளி வாங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News