உள்ளூர் செய்திகள்

நாகையில் கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகையில், கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-23 09:56 GMT   |   Update On 2023-04-23 09:56 GMT
  • கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
  • கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ் மோகன் தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் பாலகுரு முன்னிலை வகித்தார்.

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் முத்தையன், மாவட்ட தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் நல வாரிய அட்டை உள்ள அனைவருக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பெட்ரோல், டீசல் மற்றும் சிமெண்ட், மணல், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

முடக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

இடம்பெயரும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், இலவச மருத்துவ உதவி, குழந்தை பராமரிப்பு சேவை, கல்வி உதவி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News