உள்ளூர் செய்திகள்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மயிலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியின் விழிப்புணர்வு பேரணியை மயிலம் யூனியன் தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மயிலத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு

Published On 2022-07-15 14:15 IST   |   Update On 2022-07-15 14:15:00 IST
  • மயிலத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • பள்ளி வளாகத்தில் புறப்பட்டு மயிலம் பஸ் நிறுத்தம் வரை பேரணியாக சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

விழுப்புரம்:

மயிலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் உயர்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மயிலம் யூனியன் தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் இளம் வயது திருமணத்தை தடை செய்வீர், ஒளிமயமான வாழ்விற்கு ஒரு குழந்தை போதுமே, திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம், என்பனவற்றை கோஷங்களை எழுப்பி பள்ளி வளாகத்தில் புறப்பட்டு மயிலம்பஸ் நிறுத்தம் வரை பேரணியாக சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர், குமாரசிவ விஸ்வநாதன், மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்எல்ஏ வழக்கறிஞர் சேது நாதன் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன், பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், வீடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ் கொல்லியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி லட்சுமி வர்ணமுத்து, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News