உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம்

Published On 2022-10-27 15:09 IST   |   Update On 2022-10-27 15:09:00 IST
  • நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட் டுள்ளது.
  • பரிசீலனைகள் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாட்டில் மாநிலத்திற்கு என தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட் டுள்ளது.

அந்த குழுவிற்கு கருத்துக்களை அனுப்பும் பொருட்டு, கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன துணை முதல்வர் மோகன், ஓய்வுபெற்ற கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளிகளின் உரிமையாளர்கள், தாளாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் என ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, வேப்பன பள்ளி, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம், தளி ஆகிய 10 ஒன்றியங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் 9 கேள்விகள் கொண்ட மனுக்கள் வழங்கப்பட்டு, அதில் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க அறிவு றுத்தப்பட்டது. அதன்படி, அவர்கள் அந்த பகுதியில் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த, தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மனுக்களை பூர்த்தி செய்து அளித்தனர். அவர்களிடம் பெறப்பட்ட மனுக்கள் சேலத்தில் நடைபெறவுள்ள ஆணை கூட்டத்தில் கொண்டு சேர்த்து, அதன் மீது விவாதங்கள் மற்றும் பரிசீலனைகள் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

Tags:    

Similar News