உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைக்கலாம் -அதிகாரி தகவல்

Update: 2022-11-29 10:15 GMT
  • விதைப்பண்ணை அமைக்க 975 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் அருணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயறு வகைப்பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க 975 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் உளுந்து பயிர் மட்டும் 638 ஹெக்டேர் ஆகும்.

தற்போது நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் அதனைப் பயன்படுத்தி, தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயறுவகைப்பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க முன்வர வேண்டும். பயறுவகைப் பயிர்களில் விதைப்பண்ணை அமைப்பதினால் மண்ணிற்கு தேவையான தழைச்த்து காற்றிலிருந்து நிலைப்படுத்தப்படுகிறது. இதனால் மண்ணின் தரம் மேம்படுகிறது.

மேலும் சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாலும், ஊக்குவிப்பு மானியம் வழங்கப்படுவதாலும் லாபமும் பெற முடியும். எனவே விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News