உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 568 பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்கம்

Published On 2022-11-30 15:14 IST   |   Update On 2022-11-30 15:14:00 IST
  • வானவில் மன்றத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் திறனை பார்வையிட்டார்.
  • சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்கான சுழலை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் திறனை பார்வையிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 166 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 106 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 296 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 568 பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் மனபான்மையை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துகள் குறித்து சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்கான சுழலை உருவாக்குவது இதன் நோக்கமாகும். ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு ஆரம்ப பள்ளியில் இருந்தே அடிப்படை கல்வி அறிவு வழங்க வேண்டும். வானவில் மன்றத்தின் நோக்கத்தை செம்மைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் தாங்கள் தயார் செய்த அறிவியல் பூர்வமான பொருட்களை கொண்டு செயல் விளக்கங்களை செய்து காட்டினார்கள். மேலும், மாணவ, மாணவிகளே தயார் செய்த கைவினைப் பொருட்களை கலெக்டர் பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News