உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-08-11 14:43 IST   |   Update On 2023-08-11 14:43:00 IST
  • இளம் வயது திருமணம் செய்தாலோ, பெண்களை ஆபாசமாக சித்தரித்தலோ போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
  • மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோருக்கு சிறை தண்டனை கிடைக்கும்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி பழைய பேட்டை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், இளம் வயது திருமணம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை தாங்கி னார். சிறப்பு அழைப்பா ளராக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெனிபர், மாணவ, மாணவிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.

அவர் பேசியதாவது:-

போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் உடல் நலம் கெடுவதோடு, மன நலமும் பாதிக்கின்றன. தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் பல குற்றச் சம்பவங்கள் நடக்கவும் போதைப் பொருள் காரண மாகின்றன. குறிப்பாக மாணவ, மாணவி கள் எக்காரணம் கொண்டும் போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

மற்றவர்கள் பயன்படுத்து வதைப் பார்த்தால், சம்பந்தப் பட்ட அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் இரு சக்கர வாகனங்களை ஓட்டக் கூடாது.

மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோருக்கு சிறை தண்டனை கிடைக்கும். எனவே 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று, ஹெல்மெட் அணிந்து, விதிமுறைகளைப் பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். இக்கருத்தை மாலை வீட்டுக்கு சென்று உங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.

நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில், உங்களுக்கு தேவையான இலவச சட்ட ஆலோ சனையும், தீர்வும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளம் வயது திருமணம் செய்தாலோ, பெண்களை ஆபாசமாக சித்தரித்தலோ போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். பள்ளிக்கு வரும் நீங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மற்ற விஷயங்களில் கண்டிப்பாக கவனம் செலுத்தக் கூடாது.

நீங்கள் இப்போது கற்றுக் கொண்ட விழிப்பு ணர்வு விஷயங்களை குறைந்தது 10 பேரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். பின்னர் வழக்கறிஞர் கதிரேசன், மாணவ, மாணவி களுக்கு இளம் வயது திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

Tags:    

Similar News