உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ஓசூரில் தே.மு.தி.க. ஆலோசனைக்கூட்டம்

Published On 2022-07-26 15:18 IST   |   Update On 2022-07-26 15:18:00 IST
  • ஆலோசனை கூட்டம், மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
  • (ஆகஸ்ட்) மாதம் 25-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர தே.மு.தி.க உட்கட்சித் தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம், மாநகர மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாநகர கட்சிப் பொறுப்பாளர் சீனிவாச மூர்த்தி, அவைத்தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், அடுத்த (ஆகஸ்ட்) மாதம் 25-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

மேலும், நாளை ( 27-ந் தேதி) மின்சார கட்டண உயர்வு, ஜிஎஸ்டி ஆகியவற்றை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தின்போது, விண்ணப்ப படிவங்கள், கட்சியினருக்கு வழங்கப்பட்டது.

இதில், ஒன்றிய செயலாளர் கண்டராயன், மாநகர பொருளாளர் அப்பய்யா, அறிவழகன், வெங்கடேஷ், மணி, உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News