தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் யசோதா மதிவாணன் தலைமையில் நடந்த போது எடுத்த படம். அருகில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி மற்றும் பலர் உள்ளனர்.
தருமபுரியில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
- எந்த பணிக்கும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பரிந்துரை கடிதங்கள் கொடுக்கவில்லை.
- ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே நடந்துள்ள திட்டப் பணிகளின் முறைகேடுகள் நடந்துள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற கூடத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சரஸ்வதி முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஊராட்சி செயலாளர் மரியம் ரெஜினா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாநில நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 73 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கும், 15-வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
மேலும் மாவட்ட ஊராட்சி அலுவலகம் மூலம் செலவு செய்யப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு ஒப்புதல் பெறப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் பேசுகையில், தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு பொது நிதி மற்றும் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் அனைத்தும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு தெரியா மலேயே நடந்துள்ளது. இதில் எந்த பணிக்கும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பரிந்துரை கடிதங்கள் கொடுக்கவில்லை.
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் என்று கூறினர்.
இதற்கு பதில் அளித்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் கூறுகையில், மாவட்ட ஊராட்சி பொது நிதி மற்றும் 15-வது நிதி குழு மானிய திட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே நடந்துள்ள திட்டப் பணிகளின் முறைகேடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கைகள் சமர்ப்பி க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்.