உள்ளூர் செய்திகள்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர்ந்த பச்சை ரோஜா

Published On 2022-08-09 10:06 GMT   |   Update On 2022-08-09 10:06 GMT
  • பூங்கா முழுவதிலும் நடவு செய்ய தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
  • சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர்.

ஊட்டி :

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியமான ஒன்று ஆகும். இந்த பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர் செடிகள் உள்ளன.

சிறப்பாக பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பல வண்ணங்களிலான ரோஜா மலர்களும் உள்ளன. இந்த நிலையில் சிம்ஸ் பூங்கா பசுமைக்குடிலில், பச்சை ரோஜா வளர்க்கப்பட்டு வருகிறது. பூங்கா நிர்வாகக்தின் புதிய முயற்சியாக வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட பச்சை ரோஜா கட்டிங் தொட்டியில் வளர்க்கப்பட்டு வருகிறது.

தற்போது பசுமைக்கு டியில் வளர்க்கப்பட்டு வந்த செடியில் ஒரு பச்சை ரோஜா மலர்ந்துள்ளது. இதனை பாதுகாப்புடன் வளர்த்து பூங்கா முழுவதிலும் நடவு செய்ய தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர். கடந்த காலங்களில் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா வளர்க்கப்பட்டது. நாளடைவில் அதன் வளர்ச்சி தடைபட்டது. தற்போது வெளியில் இருந்து பச்சை ரோஜா செடி கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது.

இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றுள்ளது‌. எதிர்காலத்தில் சீதோஷண நிலைக்கு ஏற்ப பச்சை ரோஜா நாற்றுக்களை பூங்கா முழவதும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர்.  

Tags:    

Similar News