உள்ளூர் செய்திகள்

கோவையில் மத்திய அரசில் வேலை வாங்கித்தருவதாக போலி பணி ஆணையை கொடுத்து வாலிபரிடம் ரூ.11 ½ லட்சம் மோசடி

Published On 2023-03-21 15:35 IST   |   Update On 2023-03-21 15:35:00 IST
  • பணம் கொடுத்தால் வேலை வாங்கித்த ருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
  • கடந்த 13-ந் தேதி சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் பிரசாந்த் உத்தமன் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவை,

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது 37). பட்டதாரியான இவர் மத்திய அரசு வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது கடந்த 2019-ம் ஆண்டு நண்பர் ஒருவர் மூலமாக கோவை வீரகேர ளத்தை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் ராஜேஸ்குமாருக்கு அறிமுக மானார்.

அவர் மத்திய அரசில் தனக்கு தெரிந்த அதிகாரிகள் ஏரளமானவர்கள் இருப்ப தாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கித்த ருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மையென நம்பிய ராஜேஸ்குமார் ரூ.11.50 லட்சம் பணத்தை பிரசாந்த் உத்தமனிடம் கொடுத்தார்.

அதன்பின்னர் ராஜேஸ்குமாருக்கு மத்திய அரசின் இந்துஸ்தான் ஸ்கவுட்டில் வேலை கிடைத்தது போல போலியான பணி ஆணை யை அரசு முத்திரையுடன் கொ டுத்தார். பின்னர் அந்த பணியாணையை கொண்டு பணியில் சேர சென்ற போது அது போலியானது என்பது தெரியவந்தது.இதையடுத்து ராஜேஸ்குமார் பணத்தை திருப்பிக் கேட்ட போது பிரசாந்த் உத்தமன் கொடுக்க மறுத்துவிட்டார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஸ்குமார் இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 13-ந் தேதி சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் பிரசாந்த் உத்தமன் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News