உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் நகர சாலைகளில் சுற்றித் திரிந்த பள்ளி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கியபோது எடுத்தபடம்.

சிதம்பரம் நகரில் பள்ளிக்கு செல்லாமல் சாலைகளில் சுற்றி திரிந்த மாணவர்கள் அறிவுரை கூறி அனுப்பிய போலீசார்

Published On 2023-07-14 07:35 GMT   |   Update On 2023-07-14 07:35 GMT
  • பள்ளி சீறுடையுடன் பள்ளிக்கு செல்லாமல் வடக்கு வீதியில் சில மாணவர்கள் சுற்றி திரிந்தனர்.
  • தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு, மாணவர்களை அவரவர் வகுப்பறையில் விட்டுச் சென்றனர்.

கடலூர்:

சிதம்பரத்தில் பள்ளிக்கு வராமல் வீதியில் சுற்றித்திரிந்த மாணவர்களை போலீஸார் அழைத்துச் சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் நகர பகுதியில் பள்ளி சீறுடையுடன் பள்ளிக்கு செல்லாமல் வடக்கு வீதியில் சில மாணவர்கள் சுற்றி திரிந்தனர். அப்போது நகர பகுதியில் ரோந்து பணியில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி இதனை கண்டார். அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்த ஏ.டி.எஸ்.பி., மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீ சாரிடம் மாணவர்களை ஒப்படைத்து, பள்ளிக்கு அழைத்து சென்று விட கூறினார். மாணவர்களை அழைத்து சென்ற போக்குவரத்து போலீசார், தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு, மாணவர்களை அவரவர் வகுப்பறையில் விட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News