உள்ளூர் செய்திகள்

கோவை காந்திபுரத்தில் வைரமோதிரம் திருடிய கணவன்-மனைவி கைது

Published On 2023-10-12 14:35 IST   |   Update On 2023-10-12 14:35:00 IST
  • வேலை பார்த்த வீட்டில் துணிகர கைவரிசை
  • கணவவருடன் சேர்ந்து வின்னாஸ் டபி வீட்டில் திருடியதாக ஒப்புக் கொண்டார்

கோவை,

கோவை காந்திபுரம் 2-வது வீதியைச் சேர்ந்தவர் வின்னாஸ்டபி (வயது 34). இவர் சம்பவத்தன்று வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம், தங்கச்சங்கிலி ஆகியவை மாயமானது தெரியவந்தது.

இதுதொடர்பாக வின்னாஸ்டபி, ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக வின்னாஸ்டபி வீட்டில் வேலை பார்த்த பி.என்.புதூர் அடுத்த லிங்கனூரை சேர்ந்த மேகலா என்ற பரிமளாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசிய மேகலா ஒருகட்டத்தில் கணவர் ஸ்ரீஹரி என்பவருடன் சேர்ந்து வின்னாஸ் டபி வீட்டில் வைர மோதிரம், தங்கச்சங்கிலி திருடியதாக ஒப்புக் கொண்டார்.

அவர்களிடம் தங்க நகைகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து வின்னாஸ்டபி வீட்டில் தங்க நகைகள் திருடியதாக மேகலா, ஸ்ரீஹரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News