உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்ஸ் வாகனத்தை சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

நெல்லையில் அருணா கார்டியாக் கேர் சார்பில் மனித சங்கிலி

Published On 2023-09-30 14:33 IST   |   Update On 2023-09-30 14:33:00 IST
  • மனித சங்கிலி நிகழ்ச்சி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
  • மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நெல்லை:

உலக இருதய தினத்தை முன்னிட்டு நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை சார்பில் இதயம் காப்போம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவப்பிரகாச சத்திய ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ சிகிச்சையாக ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ரோட்டரி கவர்னர் முத்தையா, ஐ.டபிள்யூ.டி. முன்னாள் மாவட்ட சேர்மன் அமுதா ராஜேந்திரன், டாக்டர் சொர்ண லதா, டாக்டர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனைத்தொடர்ந்து அருணா கார்டியாக் கேர் சார்பில் மருத்துவமனை வளாகத்தில் இதயம் காப்போம் என்ற பெயரில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஸ் பச்சேரா, குமரேசன், இன்னர் வீல் கிளப் ஆப் திருநெல்வேலி தலைவர் மீனா சுரேஷ், செயலாளர் சுனிதி பாலகிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமன் ஜெயபிரகாஷ் மற்றும் பொருநை ரோட்டரி கிளப் தலைவர் கோமதி மாரியப்பன், செயலாளர் பவித்ரா கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனித சங்கிலி நிகழ்ச்சியில் எச்.டி.எப்.சி. வங்கி மேலாளர் லெட்சுமணன், வங்கி ஊழியர்கள், அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் இதய நலனுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News