உள்ளூர் செய்திகள்

கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு.

போடியில் கனமழைக்கு வீடு இடிந்து சேதம்

Published On 2022-11-13 05:32 GMT   |   Update On 2022-11-13 05:32 GMT
  • தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
  • கனமழைக்கு போடி 2-வது வார்டு பகுதியில் வீடு இடிந்து விழுந்தது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 2-வது வார்டு புதூர் பகுதியில் செல்வம் மனைவி ராசாத்தி(60) தனியாக வசித்து வருகிறார். நேற்றிரவு அவரது பேத்தி ரஞ்சனி(20) பாட்டி வீட்டுக்கு வந்தார். இரவில் 2 பேரும் தூங்கினர். அப்போதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.

சிறிதுநேரத்தில் மேற்கூரையில் இருந்து பூச்சுகள் விழுந்ததால் சுதாரித்துக்கொண்ட 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறினர். சிறிதுநேரத்தில் வீட்டின் சுவர் முழுவதும் இடிந்து பொருட்கள் நாசமானது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் சரியான நேரத்திற்கு வெளியே வந்ததால் உயிர்தப்பினார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மாற்றுத்திறனாளியான பாட்டி சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார். தற்போது வீடும் சேதமடைந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News