உள்ளூர் செய்திகள்
ஓசூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆலோசனை கூட்டம்
- கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
- தேவையான மருத்துவ உபகரணங்களை பெறுவதற்கான அனுமதியை டெல்லியில், துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி பெற்றுத்தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்று தருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கீதா தலைமை தாங்கினர்.
இதில் கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், மருத்துவமனையின் உள் கட்டமைப்பை மேம்படுத்த வும்,சிகிச்சைகள் மேற்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்களை பெறுவதற்கான அனுமதியை டெல்லியில், துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி பெற்றுத்தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.