உள்ளூர் செய்திகள்

ஓசூர் மாநகராட்சி பள்ளிகளில், தூய்மை-சுகாதாரத்தில் முன்மாதிரியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது - கல்விக்குழு தலைவர் தகவல்

Published On 2022-12-01 15:02 IST   |   Update On 2022-12-01 15:02:00 IST
  • மாநகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • பள்ளிகளில் கல்வித்தரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டி ற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

ஓசூர்,

ஓசூர் மாநகராட்சியில், கல்விக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு, கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில், மாநகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும்,பள்ளிகளில் கல்வித்தரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டி ற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் பேசுகையில்:-

"ஓசூர் மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் 44 அரசு பள்ளிகளையும் தூய்மை மற்றும் சுகாதாரத்தில், தமிழகத்திலேயே முன்மாதி ரியான பள்ளிகளாக மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், டெல்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இயங்கும் அரசு பள்ளிகளை முன் உதாரணமாக சுட்டிக் காட்டும் நிலைமை மாறி, அவர்கள் தமிழகத்தில் குறிப்பாக, ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளின் நிலவும் தூய்மை மற்றும் சுகாதார மேம்பாட்டு அம்சங்களை முன் உதாரணமாக சுட்டிக் காட்டும் அளவிற்கு மாற்றி அமைக்க உறுதி எடுத்துள்ளோம் என்று கூறினார்.

கூட்டத்தில் பேசிய ஆணை யாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சிக்குப்பட்ட 34 அரசு பள்ளிகளில், பராமரிப்பு பணிகளுக்காக ரூ. 5.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த கூட்டத்தில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் சிவராமன், யசஷ்வினி மோகன் உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News