பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதலை வழங்கிய காட்சி.
தேவசானப்பள்ளி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
- 5 வகுப்பு படித்து முடித்து மேல் வகுப்பு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கபட்டது.
- 5- ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்தை கலந்து கொண்ட
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தேவசானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சூளகிரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
ஆசிரியர்கள் ராஜசேகர், ஜெசன்நாதன் மற்றும் தலைமை உதவி ஆசிரியர் உமா மஹேஸ்வரி, சுபாஷினி, ஜெயந்தி, ஜான்சிராணி, முனிராஜ், சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 5 வகுப்பு படித்து முடித்து மேல் வகுப்பு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கபட்டது.
கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தபடும் நிலையில் 5- ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்தை கலந்து கொண்ட பெற்றோர்கள் பாராட்டினர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஜா செய்திருந்தார்.