உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மாசுப்பிரமணியனிடம் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.
அரசு மருத்துவமனை மேம்பாட்டு பணி விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் தகவல்
- அமைச்சரே நேரில்வந்து மருத்துவமனையை ஆய்வு செய்ததையும் நினைவூட்டினார்.
- உடனடியாக மருத்துவத் துறை அதிகாரிகளை தொடர்பு அமைச்சர்கொண்டார்.
நாகப்பட்டினம்:
சென்னை முகாம் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து, நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது தொடர்பாக கோரிக்கை வைத்தார்.
ஏற்கெனவே இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்ததையும், அமைச்சரே நேரில்வந்து மருத்துவமனையை ஆய்வு செய்ததையும் நினை வூட்டினார்.
உடனடியாக மருத்துவத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர், மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
விரைவில் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பி ரமணியன் உறுதியளித்தார்.