உள்ளூர் செய்திகள்

விலையில்லா ஆடுகளை முறையாக பராமரிக்கிறார்களா என கால்நடை பராமரிப்புத்துறை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பழனிவேல் ஆய்வு செய்தார்.

ஆடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா - அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-06-14 09:48 GMT   |   Update On 2022-06-14 09:48 GMT
  • 14 ஒன்றியங்களில் உள்ள பயனாளிகளுக்கு ஒரு ஒன்றியத்திற்கு 100 ஆடுகள் வீதம் 1400 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • ஆய்வு பணியின் போது ஆடுகளுக்கு குடற்புழு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தமிழக அரசு சார்பில் ஆதரவற்ற விதவை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன. அதாவது ஒரு ஒன்றியத்திற்கு 100 ஆடுகள் வீதம் 1400 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விலையில்லா ஆடுகள் முறையாக பராமரிக்கப் படுகிறதா என்பது குறித்து நாஞ்சிக்கோட்டை ஊராட்சி கொல்லாங்கரை, குருங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பழனிவேல் ஆய்வு செய்தார்.

அப்போது கால்நடைகள் சரியான முறையில் பராமரி க்கப்பட்டு வருகிறீர்களா? ஏதேனும் நோய் தாக்கினால் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்கிறீர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் ஆய்வு பணியின் போது ஆடுகளுக்கு குடற்புழு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது கால்நடை உதவி மருத்துவர் செரீப் மற்றும் மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News