உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் தேன்கூடு கட்டியுள்ள காட்சி.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ராட்சத தேன்கூடு

Published On 2022-07-12 14:54 IST   |   Update On 2022-07-12 14:54:00 IST
  • நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ராட்சத தேன்கூடு கட்டுவதும், தீயணைப்புத் துறையினா் அவற்றை அகற்றுவதும் வாடிக்கையாகி உள்ளது.
  • இந்த கட்டடத்தின் வலது புற பகுதியில், அறையின் வெளிப்பகுதியில் தேன்கூடு ஒன்று உள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் 4 தளங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை கூட்டுறவுத்துறை, ஊரகவளர்ச்சி துறை உள்பட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கட்டடத்தின் வலது புற பகுதியில், மாவட்ட வழங்கல் அலுவலர் அறையின் வெளிப்பகுதியில் தேன்கூடு ஒன்று உள்ளது. ஏற்கெனவே இரு முறை அந்தப் பகுதியில் தேன்கூடு இருந்த நிலையில் திடீர், திடீரென தேனீக்கள் கலைந்து கலெக்டர் அலுவலக ஊழியர்களையும், பொதுமக்களையும் கடுமையாக தாக்கின.

ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட பகுதியிலேயே தேன்கூடு கட்டுவதும், தீயணைப்புத் துறையினா் அவற்றை அகற்றுவதும் வாடிக்கையாகி உள்ளது. தற்போது மீண்டும் தேன்கூடு உருவாகி உள்ளது.

பொதுமக்களை தேனீக்கள் தாக்குவதற்கு முன் தீயணைப்புத் துறையினர் மூலம் தேன்கூட்டை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Tags:    

Similar News