உள்ளூர் செய்திகள்

பெங்களூரிலிருந்து ஓசூர் வழியாக திருப்பத்தூருக்கு கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கர்நாடக மாநில மது பாட்டில்கள் காருடன் பறிமுதல் -4 பேர் கைது

Published On 2022-11-20 09:50 GMT   |   Update On 2022-11-20 09:50 GMT
  • காருக்குள் பெட்டி,பெட்டியாக கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
  • மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஓசூர்,

ஓசூர் அருகே மாநில எல்லையான சிப்காட் பகுதியில், நேற்று ஓசூர் கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையில்,போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக, ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் காருக்குள் பெட்டி,பெட்டியாக கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பெங்களூருவில் இருந்து அவற்றை திருப்பத்தூருக்கு காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையத்து கர்நாடக மது பாட்டில்களை கடத்திச்சென்ற திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே துக்கியம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (34), குமார் (30), வாணியம்பாடி அருகே சின்ன களியம்பட்டு பகுதியை சேர்ந்த பிரபு (33) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கீரனப்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 1லட்சம் மதிப்புள்ள 15 பெட்டி கர்நாடக மாநில மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News