உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடைபெற்றது.

இலவச பொது மருத்துவ முகாம்

Published On 2022-12-14 15:33 IST   |   Update On 2022-12-14 15:33:00 IST
  • பயத்தவரன்காடு சுப்பையா உதவி நடுநிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்.
  • நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பயத்தவரன்காடு சுப்பையா உதவி நடுநிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவருமான தென்னரசு தொடங்கி வைத்தார்.

இதில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, வழக்கறிஞர் அன்பரசு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாகை மாவட்ட தலைவர் வேதநாயகம், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வர்த்தக சங்க முன்னாள் மாவட்ட தலைவர் குணசேகரன், வேதாரண்யம் வர்த்தக சங்க செயலாளர் சுபஹானி, பொருளாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் தங்கதுரை, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜாகிருஷ்ணன், தேசிய நல்லாசிரியர் செல்வராஜ், அரிவையார் சங்க உறுப்பினர்கள் மல்லிகா, கவிதா மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மருத்துவர்கள் சபரிகிருஷ்ணன், சதாசிவம் அடங்கிய மருத்துவ குழுவினர் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொது மருத்துவம், நுரையீரல், ஆஸ்துமா, நீரிழிவு இருதய, உடல் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News