உள்ளூர் செய்திகள்

ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் வனப்பாதுகாப்பு தின கொண்டாட்டம்

Published On 2023-07-09 08:43 GMT   |   Update On 2023-07-09 08:43 GMT
  • விழாவிற்கு மாணவர்களின் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.
  • மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் மரங்களை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

தென்காசி:

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் வனப்பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் மாணவி தஸ்னிமா வரவேற்று பேசினார். விழாவிற்கு பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்து கூறினார். மாணவிகள் மீனா சுல்பியா மற்றும் ஹன்சுல் லுபைனா மரங்களை பேணி பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் மரங்களை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர். மேலும் மாணவ-மாணவிகள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை பள்ளிக்கு கொண்டு வந்திருந்தனர் . பள்ளியின் தாளாளர், முதல்வர், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இணைந்து மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டனர். மாணவி ஹனா பாத்திமா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா செய்திருந்தார்.

Tags:    

Similar News