உள்ளூர் செய்திகள்
முதியோர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும்- விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்
- ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.
- நகர்புறத்திலும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் பிரகாஷ், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும். நகர்புறத்திலும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
55 வயதைக் கடந்த அனைத்து முதியோர்க ளுக்கும், 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயிகள் அனைவருக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.