உள்ளூர் செய்திகள்

மல்லிபட்டினம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-05-23 15:20 IST   |   Update On 2023-05-23 15:20:00 IST
  • விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிப்பது வழக்கம்.
  • படகுகளின் தரம், உறுதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வு செய்தனர்.

பேராவூரணி:

தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்குடனும், மீன்பிடி தடைக்காலம் ஆண்டு தோறும் நடைமுறைப்படு த்தப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய மொத்தம் 61 நாட்களுக்கு, பாரம்பரிய மீன்பிடி கலன்கள் நீங்கலாக விசைப்படகுகள், மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிப்பது வழக்கம்.

இந்த தடை காலத்தில் அனைத்து விசைப்படகு களும் கடலில் இருந்து கரைக்கு ஏற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

மீன்வளத்துறை உதவி இயக்குநர், தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் படகுகள் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவர்.

சேதுபாவாசத்திரம், மல்லி ப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் 148 விசைப்பட குகளையும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணி கண்டன், கூடுதல் இயக்குநர் கொளஞ்சிநாதன், ஆய்வாளர் கெங்கேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது படகுகளின் தரம், உறுதி, தயாரிக்கப்பட்ட தேதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வு செய்து அனைத்து படகுகளும் தகுதியானது என சான்றிதழ் வழங்கினர்.

Tags:    

Similar News