பாதிக்கப்பட்டவர்களுக்கு நகர்மன்ற தலைவர் செல்வராஜ், உதவித்தொகை வழங்கி ஆறுதல் தெரிவித்த காட்சி.
பள்ளிபாளையத்தில் தொழிலாளி வீட்டில் தீ விபத்து
- கோபால் நூற்பாலை தொழிலாளி நேற்று கோபாலின் மனைவி சுவாமி படத்திற்கு விளக்கேற்றி வழிபட்டுள்ளார்.
- அப்போது விளக்கின் தீ அருகில் இருந்த பூஜை பொருட்களில் பற்றி, வீடு முழுவதும் பரவியுள்ளது.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஈஆர் தியேட்டர் ரோட்டில் வசிப்பவர் கோபால் நூற்பாலை தொழிலாளி நேற்று கோபாலின் மனைவி சுவாமி படத்திற்கு விளக்கேற்றி வழிபட்டுள்ளார். அப்போது விளக்கின் தீ அருகில் இருந்த பூஜை பொருட்களில் பற்றி, வீடு முழுவதும் பரவியுள்ளது. வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். வீட்டினுள் துணிமணிகள், அரிசி, மளிகை மற்றும் வீட்டு உப யோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்தது. பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
விபத்து குறித்து தகவல் அறிந்த நகர்மன்ற தலைவர் செல்வராஜ், சம்பவ இடத்திற்கு சென்று கோபால் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து நிதியு தவி செய்தார். மாணவியின் பாடப்புத்தங்கள் தீயில் எரிந்து போனதை அறிந்த வர். மாற்று புத்தகம் வழங்க சிபாரிசு செய்தார். மேலும், வார்டு தி.மு.க. கவுன்சிலர் வினோத், ரூ.5 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.