நீலகிரியில் பாரம்பரிய தேக்கிஸ் அம்மன் கோவிலில் திருவிழா
- வட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சியை ரசித்து பார்த்த அமைச்சர் மதிவேந்தன்
- தோடர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டார்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தோடர் ஆதிவாசி மலைவாழ் பழங்குடியின மக்களின் பாரம்பரிய தேக்கிஸ் அம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அந்த கோவிலுக்கு வந்திருந்தார்.
அப்போது அவருக்கு நீலகிரி மாவட்ட திட்டகுழு தலைவரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான பொன்தோஸ் தலைமையில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவிலில் வழிபாடு செய்த அமைச்சர் அங்கு தோடர் இனமக்களின் கலாச்சார நடனத்தை பார்த்து ரசித்தார். இதன் ஒரு பகுதியாக வட்டக்கல் தூக்கும் நிகழ்வு நடந்தது.
இதனை ஆர்வத்துடன் பார்வையிட்ட அமைச்சர், தோடர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டார். அவர்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்று கொண்டார்.
அப்போது முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் கவுதம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.