உள்ளூர் செய்திகள்

கோவை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-21 15:00 IST   |   Update On 2023-11-21 15:00:00 IST
  • சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம்
  • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

கோவை,

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அரசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு நலசங்க தலைவர் சுப்பிரமணியம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க அமைப்பு செயலாளர் பிரபாகரன், கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், மாவட்ட செயலாளர் மந்தராசலம், தமிழ்நாடு கட்சிசார்பற்ற விவசாய சங்க பொருளாளர் டாக்டர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். 

Tags:    

Similar News