உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி கலெக்டர் பெயரில் வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி

Published On 2022-09-25 05:03 GMT   |   Update On 2022-09-25 05:03 GMT
  • தேனி கலெக்டரின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் நலம் விசாரிப்பது போல் குறிஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றதாக புகார் எழுந்தது.
  • இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் பேரில் மர்ம நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலியான வாட்ஸ்- அப் கணக்கு தொடங்கினார். அதில் கலெக்டரின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் நலம் விசாரிப்பது போல் குறிஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றதாக புகார் எழுந்தது.

இந்த தகவல் கலெக்டர் முரளிதரனுக்கு கிடைத்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஸ் டோங்க ரேவிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன் பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மீண்டும் மற்றொரு எண்ணில் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ேமலும் ஒரு மர்ம நபர் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்றுள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags:    

Similar News