search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake Whatsapp account"

    • தேனி கலெக்டரின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் நலம் விசாரிப்பது போல் குறிஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றதாக புகார் எழுந்தது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் பேரில் மர்ம நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலியான வாட்ஸ்- அப் கணக்கு தொடங்கினார். அதில் கலெக்டரின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் நலம் விசாரிப்பது போல் குறிஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றதாக புகார் எழுந்தது.

    இந்த தகவல் கலெக்டர் முரளிதரனுக்கு கிடைத்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஸ் டோங்க ரேவிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன் பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மீண்டும் மற்றொரு எண்ணில் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ேமலும் ஒரு மர்ம நபர் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்றுள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    • தேனி மாவட்ட கலெக்டர் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் போலியான வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி உள்ளனர்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி மர்ம நபர்கள் போலியான வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி உள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்கள், பொதுமக்களை கலெக்டர் நலம் விசாரிப்பது போன்றும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதுபோலும் குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்ய முயற்சித்து வருகின்றனர்.

    இது குறித்து தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ்டோங்கரே அறிவுறுத்தி உள்ளார்.

    ×